யார் இவள்!!!! பொய்யான நண்பர்களின் துரோகத்தால் வஞ்சிக்கப்பட்டவள்... யார் இவள்!!!! காதல் என்னும் பெயரில் ஒருவனிடம் காயம் பட்டவள்... யார் இவள்!!!! பல உறவுகளால் கைவிடப்பட்டவள்... யார் இவள்!!!! நான் இழந்த என்னை மீட்டெடுக்க முயற்சிப்பவள்... யார் இவள்!!!! அனைத்து உணர்வுக்கும் உறவுக்கும் அப்பாற்பட்டவள்... யார் இவள்!!!! நான் யார் என உன்னிடம் காட்டி கொள்ள விரும்பாதவள்... யார் இவள்!!!! வாழ்வின் சதியை வெல்ல தினமும் விதியோடு போராடுபவள்... யார் இவள்!!!! நான் யார் என நீ அறியும் நேரத்தில்...... நீ யார் என நீ அறிந்தால் ... உன் வாழ்க்கை உன் கையில்....
இந்த புத்தாண்டு வெற்று புத்தகம் போன்றது. அதில் எழுத கூடிய பேனா உங்கள் கைகளில் உள்ளது. எனவே அந்த வெற்று புத்தகத்தில் உங்களுக்கான ஒரு அழகான கதையை உருவாக்குங்கள். இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
விலகிவிட்ட ஒரு உறவை, ஒரு நட்பை எவ்வாறெல்லாம் கடந்து வந்திருக்கிறேன் தெரியுமா???!
புகழ் பெற்ற எழுத்தாளனின் புத்தகமொன்றை வாசிப்பதன் மூலம், ஒரு செடி நடுகையின் மூலம், கவிதைகள் எழுதி கொட்டித் தீர்ப்பதன் மூலம், புது மொழியினை கற்பதன் மூலம்-
விட்டு விலகியவர்களின் வெற்றிடங்களை வெறுமையின்றி நிரப்பிக் கொண்டேன்.
ஆனால் நிச்சயமாக ஒரு போதும் ஒரு மனித பிரதியீட்டினால் அவ் வெற்றிடங்களை நிரப்பிக் கொண்டதேயில்லை...
அன்பு யாழினி
எல்லோருக்கும் ஒன்றுபோல் இருந்ததில்லை
நான்
சிலருக்கு தேவதை
சிலருக்கு இராட்சசி
சிலர் வாழ்வில் வழித்துணை
சிலர் வாழ்வில் கானல் நீர்
சிலபோது பைத்தியக்காரி
சிலபோது திமிர்ப்பிடித்தவள்
எல்லோருக்கும் ஒன்றுபோல்
இருந்ததில்லை
நான்
அவரவர்
நூல்களுக்கேற்றாற்போல்
வெறுமே ஆடும் ஒரு பொம்மை
நான்
சிலபோது உருகும் பனிமலை
சமயங்களில்
குமுறும் எரிமலை
எப்போதும்
ஒன்றுபோல இருந்ததில்லை
நான்
நிஜமாய்
யாருக்கேனும் முடிந்திருக்கிறதா
என்ன
எல்லோருக்கும்
ஒரே முகத்தைக்
காட்டிக்கொண்டிருக்க
-😊🦋
9 months ago | [YT] | 8
View 2 replies
அன்பு யாழினி
காதலிக்க தொடங்கும் ஒரு பெண்ணின் வாக்குமூலம்..
நீ என்னை எப்படி வேண்டுமானாலும் காதலிக்கலாம்,
நான் தாங்கி கொள்வேன்.
ஆனால் நான் காதலிக்க தொடங்கினால் நீ அதில் மூழ்கி செத்துவிடுவாய்.
'அதிகம் என்னை காதலிக்க வைத்து விடாதே'.
அதன் பின் நீதான்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விநாடியும் வதைக்கப்படுவாய்..
ப்ரியத்தால் நெருக்கடிக்கு ஆளாவாய்..
அக்கறையால் அச்சமடைவாய்..
அத்தனையும் அதீதம் என்று அலறுவாய்..
திகட்டும்,
முழுங்கவும் முடியாமல்
உமிழவும் முடியாமல்
கலங்குவாய்..
எதெல்லாம் பிடித்து போய் வந்தாயோ
அதெல்லாம் பிடிக்காமல் போகலாம்.
எதெல்லாம் பிடிக்கலை என்று பிதற்றினாயோ
அதெல்லாம் பிடித்து தொலையலாம்.
ஏன் இவளை விரும்பி தொலைத்தோம் என்று பின்னாளில் நீயே இடித்துக்கொள்வாய்..
நான் 'தாங்க' ஆரம்பித்தால்
நான் அன்பினை செலுத்த ஆரம்பித்தால்
மகிழ்வை விட
மனஸ்தாபங்கள் கூடும்.
எங்கள் அளவுக்கு உங்களால்
ஈடு கொடுக்க முடியாது.
அது 'எதுவானாலும்' சரி.
'அதிகம் என்னை காதலிக்க வைத்து விடாதே'.
உன்னை பிடித்த அளவுக்கு
உன் செயலும்
உன் வார்த்தையும்
உன் அசைவும்
உன் குரலும்
ஏன்
உன் நிழலும் கூட பிடித்து தொலைத்து போகும்.
உன்னை பற்றி எழுத முடியாமல்
உன்னை நினைத்தே
அன்றைய பொழுது ஓடிவிடும்.
உன் புகைப்படத்தை பார்த்து விட்டு நகரமுடியாது.
நகர நாலைந்து மணி நேரம் கூட ஆகலாம்.
நகர்ந்தாலும் பிம்பம் கண்ணை விட்டு
அகலாது.
கண்ணிலியே இருந்து
பைத்தியக்காரியாக்கி
அதிலியே உருண்டு பிரண்டு திரண்டு
வெந்து தணிந்து செத்து போவேன்.
ஆதலினால்
'அதிகம் என்னை காதலிக்க வைத்து விடாதே'.
யாழினி 🌺❤️🦋
1 year ago | [YT] | 4
View 0 replies
அன்பு யாழினி
எலியும் பூனையும்தான்
நீயும் நானும்..
வேண்டாமென்பதை
எடுத்து செய்வாய்..
வேண்டுமென்பதை
மறந்தே தொலைவாய்..
அன்பு காதல் நேசம்
நாம்தான் என்று
அகங்காராம் கொள்வோம்..
கண்திருஷ்டி போல்
அடுத்த மணி நேரத்திலே
சண்டையில் வார்த்தையால்
கட்டிப்புரள்வோம்..
குட்டி குட்டி விசயத்தை
ஊதி பெருசாக்குவோம்..
பலூன் போல் ஆனதும்..
பதறி மன்னிப்பு ஊசியால்
பலூனை குத்தி உடைப்போம்..
ஈகோ இல்லையென
தம்மட்டம் அடிப்போம்..
முட்டி மோதியதற்குப் பின்
நீயா நானா பேசவேண்டுமென்று
மவுனத்தைக் கடைப்பிடிப்போம்..
பேசாத பொழுதுகளில்
மனம் கொதி நிலை அடையும்..
எவ்வளவு சண்டையிட்டாலும்
கடைசியில் பேசிவிடு என்று
காதல் குதிகுதியாய் குதிக்கும்..!
#காதலென்பது_யாதெனில்..
1 year ago | [YT] | 3
View 0 replies
அன்பு யாழினி
யார் இவள்!!!!
பொய்யான நண்பர்களின் துரோகத்தால் வஞ்சிக்கப்பட்டவள்...
யார் இவள்!!!!
காதல் என்னும் பெயரில் ஒருவனிடம் காயம் பட்டவள்...
யார் இவள்!!!!
பல உறவுகளால் கைவிடப்பட்டவள்...
யார் இவள்!!!!
நான் இழந்த என்னை மீட்டெடுக்க முயற்சிப்பவள்...
யார் இவள்!!!!
அனைத்து உணர்வுக்கும்
உறவுக்கும் அப்பாற்பட்டவள்...
யார் இவள்!!!!
நான் யார் என உன்னிடம் காட்டி கொள்ள விரும்பாதவள்...
யார் இவள்!!!!
வாழ்வின் சதியை வெல்ல
தினமும் விதியோடு போராடுபவள்...
யார் இவள்!!!!
நான் யார் என நீ அறியும் நேரத்தில்......
நீ யார் என நீ அறிந்தால் ...
உன் வாழ்க்கை உன் கையில்....
யார் இவள்...👉👉
1 year ago | [YT] | 3
View 0 replies
அன்பு யாழினி
இந்த புத்தாண்டு வெற்று புத்தகம் போன்றது. அதில் எழுத கூடிய பேனா உங்கள் கைகளில் உள்ளது. எனவே அந்த வெற்று புத்தகத்தில் உங்களுக்கான ஒரு அழகான கதையை உருவாக்குங்கள். இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
#மஹி🦋
2 years ago (edited) | [YT] | 5
View 3 replies
அன்பு யாழினி
உன் முகம் காண முன்னும் என் உலகம் இருள் நிரம்பியதாக இருந்தது.
நீ விட்டுச் சென்ற பின்னும் இருள் தான் என்னுலகில் நிரம்பியிருக்கு....😔
என் வாழ்வின் வெளிச்சம் நீயே!
#அம்மா
#மஹி
2 years ago | [YT] | 13
View 4 replies
அன்பு யாழினி
விலகிவிட்ட
ஒரு உறவை,
ஒரு நட்பை
எவ்வாறெல்லாம்
கடந்து வந்திருக்கிறேன்
தெரியுமா???!
புகழ் பெற்ற எழுத்தாளனின்
புத்தகமொன்றை வாசிப்பதன் மூலம்,
ஒரு செடி நடுகையின்
மூலம்,
கவிதைகள் எழுதி
கொட்டித் தீர்ப்பதன்
மூலம்,
புது மொழியினை கற்பதன் மூலம்-
விட்டு விலகியவர்களின்
வெற்றிடங்களை
வெறுமையின்றி
நிரப்பிக் கொண்டேன்.
ஆனால் நிச்சயமாக
ஒரு போதும்
ஒரு மனித பிரதியீட்டினால் அவ்
வெற்றிடங்களை
நிரப்பிக் கொண்டதேயில்லை...
மஹி 🦋
2 years ago | [YT] | 9
View 13 replies
அன்பு யாழினி
பாதையோர பயணிகளை
பின் தொடரும் நிலவைப் போலவே
நானும் இவ் வெற்றுடல்
மானிடர்களோடு இணைந்து
பயணித்துக் கொண்டிருக்கிறேன்!
#அன்பு 🦋
2 years ago (edited) | [YT] | 9
View 5 replies
அன்பு யாழினி
இந்த வாழ்க்கையை
அருவருத்து ஒதுக்கிய
பின் தான், அது வரங்களை
அபரிமிதமாக அள்ளித் தந்து கொண்டிருக்கும்!
#அன்பு 🦋
2 years ago (edited) | [YT] | 6
View 9 replies
அன்பு யாழினி
நீ மலையுச்சிக்குச் சென்று மரங்களுக்கிடையே தனித்திருக்கிறாய்;
நான் மனிதர்களிடையேயிருந்தும் தனித்திருக்கிறேன்!
பெரிதாக பேதமேதும் இல்ல
அன்பு 🦋
2 years ago (edited) | [YT] | 6
View 8 replies
Load more