Islam is the way to go to jannah



🕌 Islamic Tamil Motivational Video – Heart Touching Bayan
இந்த சேனல் இல் நீங்கள் மிக சக்தியான Tamil Islamic Reminder,
Quran & Hadith Message, மற்றும் Islamic Motivation காண்பீர்கள்.

இந்த Bayan covers:
✔ Islamic Motivation (Tamil)
✔ Quran & Sunnah Based Advice
✔ Heart-Softening Islamic Reminder
✔ Life-Changing Message for Youth & Families
✔ Islamic Lifestyle & Sunnah Practices
✔ Real Islamic Guidance for Daily Life

This video will remind you about Allah, increase your Imaan, and help you walk on the path to Jannah.
Every Muslim must listen and share. 🌙


---

⭐ CHANNEL CONTENT (For SEO Ranking)

Our channel uploads daily:
📌 Tamil Islamic Bayan
📌 Islamic Motivational Videos
📌 Quran – Hadith Lessons (Simple Tamil)
📌 Tamil Islamic Short Videos
📌 Islamic Reminder for All Ages
📌 Sunnah Lifestyle Tips
📌 Muslim Youth Motivation
📌 Heart Touching Islamic Messages

Islam is the Way to Jannah.
Subscribe and share


---

⭐ FOLLOW US

YouTube: @islamistheway-i8z
Instagram: @Riz_rashi





Islam is the way to go to jannah

Subhanallah..

23 hours ago | [YT] | 97

Islam is the way to go to jannah

*மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் எப்போதும் அமைதியாகவே இருக்கும்...*

*மதிப்பில்லாத சில்லறைகள் தான் அதிக சத்தம் போடும்!*

*சில மனிதர்களும் அப்படித்தான்.*

2 days ago | [YT] | 78

Islam is the way to go to jannah

*📚 வழி காட்டும் வான்மறை.*

*"எவன் என் அறிவுரையை விட்டு புறக்கணிப்பானோ நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கைதான் உண்டு. மறுமையில் அவனை குருடனாக நாம் எழுப்புவோம். அவன் கூறுவான்: “என் இறைவா! ஏன் என்னை குருடனாக எழுப்பினாய், நான் பார்வை உள்ளவனாக இருந்தேனே! அவன் (அல்லாஹ்) கூறுவான்: “அவ்வாறுதான் எனது வசனங்கள் உன்னிடம் வந்தன. ஆனால் நீ அவற்றை மறந்தாய். அவ்வாறே இன்றும் நீ மறக்கப்படுவாய்."*

*▪️ALQURAN 20:124-126*

5 days ago | [YT] | 62

Islam is the way to go to jannah

#வியப்பான_ஹதீஸ்..!...

செழிப்பான மதீனாவை மக்கள் கைவிட்டு ஓடும் நாள்.! பறவைகளும், ஓநாய்களும் மட்டுமே அங்கு வாழும்..!
முஸ்தத்ரக் அல்-ஹாகிம். 8311 -

ஹதீஸ் சொல்லும் ஓர் எச்சரிக்கை!

அந்த அதிர்ச்சி ஹதீஸ்..!

அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்,
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

> لَتُتْرَكَنَّ الْمَدِينَةُ عَلَى خَيْرِ مَا كَانَتْ تَأْكُلُهَا الطَّيْرُ وَالسِّبَاعُ
"மதீனா நகரம் அதன் மிகச் சிறந்த, செழிப்பான நிலையில் இருக்கும் போதே மக்களால் கைவிடப்படும்! அதன் பழங்களையும், விளைச்சல்களையும் பறவைகளும்,
வனவிலங்குகளுமே உண்ணும்!"

நபிமொழி முஸ்தத்ரக் அல்-ஹாகிம் 8310, 8311 - இஸ்னாத் ஸஹீஹ் - இமாம் புகாரி,முஸ்லிம் நிபந்தனை!

இன்னொரு அறிவிப்பில்:
"மதீனாவாசிகளே! அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் மதீனாவை 40 வருடங்கள் அவாஃபீகளுக்கு (பறவை, விலங்குகளுக்கு) விட்டு செல்வீர்கள்!" என்று வருகிறது!

சுப்ஹானல்லாஹ் !
முஸ்லிம்களே! சிந்தியுங்கள்!

பஞ்சம் வந்தால் ஊரை காலி செய்வது இயல்பு! ஆனால்....

ஊர் செழிப்பாக,பழங்கள் கனிந்து, தண்ணீர் கொட்டி, சிறந்த நிலையில் இருக்கும் போது ஏன் மக்கள் ஓட வேண்டும்?

இது தான் கியாமத்தின் ஆச்சரியமான அடையாளம்!

உலமாக்கள் தரும் நான்கு அதிர்ச்சி காரணங்கள்!

1. மதீனா கெட்டதால் அல்ல, மக்கள் கெட்டதால்! - தூய்மைப்படுத்துதல்!

இமாம் புகாரி பதிவு செய்த ஹதீஸ்:

"மதீனா கொல்லன் உலை போன்றது! அது தன்னிடம் உள்ள கெட்டவர்களை (அழுக்கை) வெளியேற்றி விடும்!"
நபிமொழி புகாரி 1871.

மதீனா ஒரு வடிகட்டி !
அது புனிதமாக, செழிப்பாக இருக்கும் போது உள்ளே இருக்கும் முனாஃபிக், பாவிகளுக்கு அங்கு இருக்க பிடிக்காது! அல்லாஹ் அவர்களை தானாக வெளியேற்றி விடுவான்! அதனால் நல்லவர்கள் மட்டும் குறைந்து, ஊர் வெறிச்சோடி காணப்படும்!

2. துன்யா மோகம் - இன்னும் பெரிய நகரம் தேடி!

ஹாஃபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) ஃபத்ஹுல் பாரியில் சொல்கிறார்கள்:

மதீனாவில் விவசாயம் செழிப்பாக இருந்தாலும், மக்கள்...

இதை விட பணம் அதிகம் கிடைக்கும் துபாய், ரியாத், அமெரிக்கா போன்ற நகரங்களை"

தேடி ஓடி விடுவார்கள்! இன்று நடக்கிறதே பாய்!
மதீனாவை விட சம்பளம் அதிகம் என்று பலர் வெளியேறுகிறார்கள் அல்லவா? இது இறுதியில் உச்சம் அடையும்!

3. தஜ்ஜாலின் பயம் - மிகப்பெரிய ஃபித்னா!

நபிமொழி புகாரி 1881-ல் வரும் ஹதீஸ்:

தஜ்ஜால் மதீனாவின் ஏழு வாசல்களில் வருவான்!
அங்கு மலக்குகள் கையில் வாளுடன் நிற்பார்கள்!அப்போது மதீனா மூன்று முறை நடுங்கும்! அதில் உள்ள ஒவ்வொரு காஃபிரும், முனாஃபிக்கும் வெளியேறி தஜ்ஜாலிடம் ஓடி விடுவான்!"

செழிப்பான ஊராக இருந்தாலும், பயம் வந்தால் மக்கள் ஓடுவார்கள் பாய்! தஜ்ஜாலின் ஃபித்னாவிற்கு பயந்து ஓடுவார்கள்!

4. பைத்துல் மக்திஸ் செழிக்கும் போது மதீனா பாழாகும்!

இது மிக முக்கியமான ஹதீஸ் 8297-வது ஹதீஸ்!

முஆத் (ரலி) சொன்னார்கள்:

> "عُمْرَانُ بَيْتِ الْمَقْدِسِ خَرَابُ يَثْرِبَ"

"பைத்துல் மக்திஸ் (ஜெருசலேம்) செழித்தோங்குவது, யஸ்ரிப் (மதீனா) பாழாவதற்கு காரணமாகும்! மதீனா பாழாவது மல்ஹமா (பெரும் போர்) வருவதற்கு அடையாளம்! மல்ஹமா வருவது கான்ஸ்டான்டிநோபிள் வெற்றிக்கு அடையாளம்! அதன் வெற்றி தஜ்ஜால் வருவதற்கு அடையாளம்!"
நபிமொழி அபூதாவூத் 4294

அல்லாஹு அக்பர்! Chain Reaction!
இன்று பைத்துல் மக்திஸை சுற்றி என்ன நடக்கிறது பாருங்கள்! யூதர்கள் அதை செழிப்பாக்குகிறார்கள்! அதன் பின் மதீனா மக்கள் குறைவார்கள், பின் உலகப் போர், பின் தஜ்ஜால்!

இதில் நமக்கு என்ன பாடம் ?

1. ஊரின் செழிப்பு ஈமானை காக்காது!

மதீனா போன்ற புனித பூமி செழிப்பாக இருந்தாலும், மக்களின் உள்ளம் கெட்டால் ஓடி விடுவார்கள்!

2. மதீனாவை நேசிப்பது ஈமானின் அடையாளம்!
நபி (ஸல்) சொன்னார்கள்:

"யார் மதீனாவின் கஷ்டத்தை பொறுத்து அங்கேயே மரணிக்கிறாரோ, நான் அவருக்கு ஷஃபாஅத் செய்வேன்!"

நபிமொழி முஸ்லிம் 1374

3. நாம் எங்கு இருந்தாலும் மதீனாவின் தூய்மையை நெஞ்சில் வைக்க வேண்டும்!

இன்று மதீனா மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது!ஆனால் ஹதீஸ் சொல்லும் அந்த நாள் வரும்! அது கியாமத்தின் நெருக்கத்தை காட்டும்!

"தண்ணீரில் மூழ்குபவர் போல துஆ கேட்காமல் தப்பிக்க முடியாத காலம் வரும்!"
நபிமொழி முஸ்தத்ரக். 8308

அந்த ஃபித்னா காலத்தில் மதீனாவை விட்டு ஓடுபவர்களாக அல்ல,
மதீனாவை நோக்கி ஓடுபவர்களாக நாம் இருக்க வேண்டும்!

வல்லாஹு அஃலம்...!...

ஆக்கம்:halarath ali:Tiruchirappalli

1 week ago | [YT] | 24

Islam is the way to go to jannah

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹுல் புகாரி (ஹதீஸ் எண்: 1240) மற்றும் ஸஹீஹு முஸ்லிம் போன்ற முதன்மையான ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு பிரபலமான ஆதாரப்பூர்வமான (ஸஹீஹான) ஹதீஸ் ஆகும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய 5 கடமைகள்:

ஸலாமுக்குப் பதிலுரைப்பது (Responding to the greeting of Peace)

நோயாளியை நலம் விசாரிப்பது (Visiting the sick)

ஜனாஸாவைப் பின் தொடர்வது (Following funeral processions)

விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது (Accepting invitations)

தும்புபவருக்குப் பதிலுரைப்பது (Responding to one who sneezes - யர்ஹமுகல்லாஹ் எனக் கூறுவது)

ஹதீஸ் அறிவிப்பாளர்: அபு ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1240

1 week ago (edited) | [YT] | 139

Islam is the way to go to jannah

"ஒரு பெண் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களிடம் வந்து:

"யா அபா அப்தில்லாஹ்! நான் விளக்கு வெளிச்சத்தில் ஆடை தைப்பதற்காக நூல் நூற்கும் ஒரு பெண். இரவில் சுல்தானின் தீப்பந்தங்களை ஏந்தியவாறு காவலர்கள் ரோந்துப் படையினர் எங்களைக் கடந்து செல்கிறார்கள். அவர்களின் நெருப்பு வெளிச்சத்தில் நான் நூல் நூற்பது எனக்கு ஹலாலா அனுமதிக்கப்பட்டதா?" என்று கேட்டார்.

அதைக் கேட்டு இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்கள் அழுதுவிட்டு, அப்பெண்ணிடம்:

"நீ யார்?" என்று கேட்டார்.

அதற்கு அப்பெண்: "நான் பிஷ்ர் அல்-ஹாஃபியின் சகோதரி" என்றார்.

உடனே இமாம் அவர்கள்: "உங்களின் வீட்டிலிருந்தே உண்மையான இறை அச்சமும் பேணுதலும் வெளிப்படுகிறது. அவர்களின் பந்த வெளிச்சத்தில் நீ நூல் நூற்காதே!" என்று கூறினார்கள்.

இவ்வளவு நுணுக்கமான ஒரு கேள்வியைக் கேட்டும், ஹராமான சந்தேகத்திற்குள் விழுந்து விடுவோமோ என்ற அப்பெண்ணின் பயத்தைக் கண்டும் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்கள் அழுதார்கள்—ஹராமைப் பற்றிப் பேசுவதையே விட்டுவிடுங்கள், இப்படிப்பட்ட ஒரு பெண் ஈமானியக் குடும்பத்தில் வளர்ந்தவராக மட்டுமே இருக்க முடியும் என்பதை அறிந்துகொண்ட இமாம் அவர்களுக்கு, 'தான் நல்ல மனிதரான பிஷ்ர் அல்-ஹாஃபியின் சகோதரி' என்று அப்பெண் பதிலளித்தபோது அது உறுதியானது.

மார்க்கத்தில் அது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் (அடிப்படை சட்டப்படி), அவளுடைய பேணுதலின் உயர் தகுதிக்கு ஏற்ப, "நூல் நூற்க வேண்டாம்" என்று பதிலளித்தார்கள். ஏனெனில், அவளது குடும்பம் உண்மையான பேணுதலுக்கு பெயர் பெற்றது.

பேணுதலின் மூன்று நிலைகள்:

1- ஹராமானதைத் தவிர்த்தல்

2- சந்தேகத்திற்குரியவைகளைத் தவிர்த்தல்,

3- சந்தேகத்தில் விழுந்துவிடுவோமோ என்ற பயத்தினால் சில அனுமதிக்கப்பட்ட (முபாஹ்) காரியங்களையும் விட்டுவிடுதல்.

அவர்கள் எத்தகைய ஈமானைச் சுமந்திருந்தார்கள்! நாம் எத்தகைய அறியாமையில்/மயக்கத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!

யா அல்லாஹ்! ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் உன்னை நோக்கி உயர்வடையும் இதயங்களை எங்களுக்குத் தந்தருள்வாயாக!"

- ஆதார நூல்கள்:
கிதாப் அல்-முவாஃபகாத் — இமாம் அல்-ஷாதிபீ
கிதாப் சிஃபத் அல்-ஸஃப்வா — இமாம் இப்னுல் ஜவ்ஸீ

- அத்ஹம் ஷர்காவி -

2 weeks ago | [YT] | 72

Islam is the way to go to jannah

Unmai...

2 weeks ago | [YT] | 22