அனைவருக்கும் வணக்கம் 🙏🏽 என் பெயர் சரோ.... நான் செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறேன்...தனியார் மண்ணும் மண் சார்ந்த தெய்வமும்! 🙏
தமிழர் மண்ணின் மரபையும், நாட்டார் தெய்வங்களின் தொன்மையான வழிபாட்டு முறைகளையும் உலகறியச் செய்யும் நமது பயணம்! 🌿
வணக்கம் உறவுகளே! 🙏❤️
கொற்றவை செல்வி YouTube சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
தமிழர் மண்ணின் அடையாளங்களாக விளங்கும் நாட்டார் தெய்வங்கள், கிராம தேவதைகள், எல்லை தெய்வங்கள், குலதெய்வங்கள் மற்றும் நமது முன்னோர்கள் கடைப்பிடித்த வழிபாட்டு மரபுகளைப் பதிவு செய்து ஆவணப்படுத்துவதே நமது நோக்கம்.

🔔 புதிய காணொளிகளைத் தவறாமல் காண Bell Icon-ஐ அழுத்துங்கள்.
🌺 கொற்றவை செல்வி 🌺

udhayaxx@gmail.com
Support and Subscribe
My Channel Link 👉 youtube.com/channel/UC_xL7DMDdVfutzevpdtskEA
my email id : udhayaxx@gmail.com


Kotravai Selvi

8 hours ago | [YT] | 0

Kotravai Selvi

மக்களின் அலட்சியத்தால் அழியும் வரலாறு சொல்லும் தடயம்

3 days ago | [YT] | 0

Kotravai Selvi

கண்டியூர் கோவில் முன்புள்ள பெரியார் சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு தஞ்சை திருவையாறு கண்டியூர் பிரம்மசிர கண்டீஸ்வரர்...

1 week ago | [YT] | 2

Kotravai Selvi

3 weeks ago | [YT] | 1

Kotravai Selvi

ஜென்மம் தொடரும் சாபகல்வெட்டு #chengalpattu #ponmar

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், பொன்மார் சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் அருள்மிகு பிடாரி சந்தியாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகில் குளமும் அங்கு 3*1 அடி உள்ள கல்வெட்டு பலகை உள்ளது.

இந்த கோவில் வேறு எங்கும் காணாத அமைப்பில் மேல் கூரை உயரம் குறைந்த கட்டிட அமைப்பில் இருந்தது வியப்பு! உள்ளே தலை மிக குனிந்தே செல்ல முடியும். அவ்வாறான சிறப்பு கொண்ட கோவிலின் வெளியே இக்கல்வெட்டு செய்தி படிக்க முடியாமல் குழப்பத்தில் ஆழ்த்தியது. இதன் செய்தி யாரும் சரியாக முழுமையாக பதிவிடவில்லை. ஒவ்வொரு எழுத்தாக எழுதி அதன் விளக்கத்தை கண்டறிந்தேன்!

மேலும் இது சாப கல்வெட்டு மற்றும் அன்றைய அரசின் கட்டளை கல்வெட்டு என்பதையும் அறிந்தேன்.

அம்மணேரி குளம் சாப கல்வெட்டு

குளத்தை பாதுகாக்க கல்வெட்டில் உள்ள 15ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் மற்றும் சமஸ்கிரதம் கலந்த வரிகள் பின்வருமாறு :

பலவுஸ்ரீஆவணிமா
தமஉகூஸ்ரீபொனமா
றுஸ்ரீமதுறஙகளசா
முதலிகளாமயள
மற்றுமுமுளளப
யிரகுடீகளபலப
டடையும்யிநீமெ
லவருகிறளசகரம
முதலாகஅமணே
ரிகுளமமாமபாகக
மசிநனாசெடடிபுததி
ரனவேதகிரிகுளம வணடலவெடீஎடுககையி
லயாதாரஒருததரகுள
ததைவெடீபயிரு
ககுதணணீவிடடுதஉ
ணடானாலகெஙகை
கரையிலேகாராமப
சுவைகொனறபா
வத்ததிலேபோககடவுமத
யாநமபறயனுககு
தநதவனடதுசிலா
உள்ளகணக்கு
தருமசெல்லசுதய
யனஎழுத்து

இதன் விளக்கம் :
"பிலவ வருடம் ஆவணி மாதம் 29 ஆம் தேதி, ஸ்ரீ பொன்மாற்று (பொன்மார்) கிராமத்து ஸ்ரீமத் ரங்கராச முதலியார் அவர்கள் மற்றும் அங்குள்ள பயிர்குடிகளும் (விவசாயிகளும்), பல பட்டடை (பல்வேறு தொழில் செய்யும்) மக்களும் இணைந்து எடுத்த முடிவு:இனிமேல் வருகிற சக்கரப் பணத்தைக் (நிதி/வரி) கொண்டு, இந்த அம்மணேரி (அம்மணி அம்மாள்) குளத்தை மாம்பாக்கத்தைச் சேர்ந்த சின்னான செட்டியாரின் புத்திரன் வேதகிரி என்பவர் வண்டல் வெட்டி (தூர்வாரி) எடுக்கையில்...யாதொரு ஒருத்தர் இந்தத் தர்மத்தைக் கெடுத்தால், குளத்தை வெட்டிப் பயிருக்குத் தண்ணீர் விட்டுத் தந்ததினால் உண்டான புண்ணியம் அழியும். அப்படிப் பாழாக்குபவன் கங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொன்ற பாவத்திலே போகக் கடவது.தயங்காமல் (தடங்கலின்றி) பறையனுக்குத் தந்த (மானியப் பாசன) உரிமையானது இந்தக் கல்வெட்டில் (சிலா) உள்ள கணக்கின்படி செல்லும். இந்தத் தர்மம் தொடர்ந்து செல்ல, சுதய்யன் எழுதிய எழுத்து."

இன்றே இதன் பொருள் அறிந்து மன நிறைவுடன் பதிவு செய்கிறேன்.

2 months ago | [YT] | 0

Kotravai Selvi

32 சந்திகளைக் கட்டி ஆளும் செஞ்சிகழுணீர் பட்டு எனும் செங்கல்பட்டு நகரை ஆளும் பிடாரி சேப்பாட்டி அம்மனின் 32 சந்திகளில் மூன்று மலைக்கு நடுவில் யாரும் அறியாத ஓடை சந்தியைக் காணும் பாக்கியம் கிடைத்தது! இன்று பிடாரி வழிபாடு யாதென்று தெரியாத பக்திக் கூட்டத்தின் நடுவே 1000 வருடம் பழமை சுமக்கும் சந்திக்கல் 🙏 வருடம் ஒரு முறை பிடாரி திருவிழாவின் போது ஒவ்வொரு சந்திக்கும் அபிஷேகம் மற்றும் எண்ணெய் காப்பு தடவி கோழி பலியிடப்படுகிறது 🌺

3 months ago | [YT] | 15

Kotravai Selvi

மீடியாக்கள் காட்டாத ஏகாம்பரேஸ்வர் கோவிலின் மறைக்கப்பட்ட பக்கங்கள்!
பல கோடி செலவு செய்தும் சீரமைக்காத மேற்கு கோபுரம். வெறும் சுவரில் சுண்ணாம்பு சாந்து மற்றும் வெள்ளை அடித்து கோவில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. கோவிலின் 40% வேலைகள் மட்டுமே நிறைவு செய்து நன்னீராட்டு பெருவிழா நடைபெற்று உள்ளது. எதற்கு இவ்வளவு அவசரமாக செய்தது இந்த தமிழ் நாடு அரசாங்கம்? ஊடகங்களும் இந்த மறைக்கப்பட்ட பகுதிகளை காட்டவில்லை . பேய் கோபுரம் என்று அழைக்கப்படும் இந்த கோபுரம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழலாம்!

7 months ago | [YT] | 5

Kotravai Selvi

செங்கல்பட்டு மார்க்கமாக தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த போது, நத்தம் செங்கல்பட்டு நகரத்தின் ஊர் பிடாரி...அருள்மிகு சேப்பாட்டி அம்மனுக்கு நில தானம் அளித்த்தை குறிக்கும் எல்லைக்கல்லை காணும் வாய்ப்பு கிடைத்தது. 1000 வருட வரலாறை சுமக்கும் தமிழரின் வரலாற்று ஆவணம். இன்றும் தொன்று தொட்டு வரும் வழிபாடு... ஒன்றல்ல இரண்டல்ல... 1000 வருடத்திற்கும் மேல்... செங்கல்பட்டு எனும் செஞ்கழுனீர்பட்டின் வரலாற்று தடயம்... இது போன்று 34 சந்திக்கற்கள் இக்கோவிலுக்கு அளித்த நிலதானத்தின் சந்திகல்கள் உள்ளன... இதில் தற்போது 9 கற்கள் விண்ணமான கற்களுக்கு மட்டுமே சமீபத்தில் நடப்பட்டன. மீதம் உள்ளவை பல்லவர் காலத்தில் நடப்பட்ட கற்கள்.
இன்றும் வருடத்திற்கு ஒரு முறை பலி செய்த படையல்கள் இந்த சந்தி கற்களுக்கு படைக்கப்பட்டு, மறுநாள் பிடாரி சேப்பாட்டி அம்மனுக்கு திருதேர் வடம்பிடித்து வீதி ஊர்வலம் முடித்து நகரின் தெரு மத்தியில் அசைவ கும்பம் படைக்கப்படுகிறது... இதில் சிறப்பு அம்மனுக்கு தாய் வீட்டு சீரில் இரண்டு பானை மதுகலயம் கொண்டு வருவது...

11 months ago | [YT] | 3

Kotravai Selvi

*அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்,*

*கீழ்கொடுங்கலூர்,*

*வந்தவாசி,*

*திருவண்ணாமலை மாவட்டம்.*

*மூலவர் : முத்துமாரியம்மன்.*

*புராண பெயர் : கீழ்கொடுங்கலூர்.*

*ஊர் : வந்தவாசி.*

*மாவட்டம் : திருவண்ணாமலை.*

*மாநிலம் : தமிழ்நாடு.*

*காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*+91-4183-242 406.*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═••⊱ •═•╗*
*❀·.:::::::·:பகிர்வு:·::::::.·❀*
*சோழ.அர.வானவரம்பன்*
*╚•═•-•═•⊰❉❉⊱•═••⊰❉•⊱ •═•╝*
*!!♤♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤♤!!*
*தல சிறப்பு : பரசுராமரின் அன்னை ரேணுகாதேவியின் கோயில்களில் இதுவும் ஒன்று.*

*பொது தகவல் :*

*உலகம் தோன்றிய காலத்திலிருந்து சக்தி வழிபாடு இருந்துவருகிறது. ஆரம்பகாலத்தில் மனிதன் இலைகளால் ஆன உடையையே உடுத்தினான். அந்த பழக்கத்தின் அடிப்படையில்தானோ என்னவோ இப்போதும் கூடசக்தியின் அம்சமாக கருதப்படும் மாரியம்மன் கோயிலில் வேப்பிலை ஆடை உடுத்தி நேர்த்திக்கடன் செய்யும் வழக்கம் இருக்கிறது.*

*தாங்கள் வேண்டிய கோரிக்கை நிறைவேறியவுடன் இப்படி நேர்த்திக்கடன் செய்யும் பழக்கம் உள்ள திருத்தலத்தில் ஒன்று தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்கொடுங்கலூர் முத்துமாரியம்மன் கோயில், இதற்கு புராணக் கதை ஒன்று உள்ளது.*

*பிரார்த்தனை : இத்தல முத்து மாரியம்மனை வேண்டிக் கொண்டால் வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.*

*அத்துடன் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், திருமணத்தில் தடை உள்ளவர்களும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் பலன் நிச்சயம் என்கிறார்கள்.*

*நேர்த்திக்கடன் : தாங்கள் வேண்டிய கோரிக்கை நிறைவேறியவுடன் வேப்பிலை ஆடை உடுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.*

*தல வரலாறு :*

*ஜமதக்னிமுனிவரின் மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் கடைசிமகன் பரசுராமன் கற்பில் சிறந்தவளான ரேணுகாதேவி பச்சைமண்ணால் செய்யப்பட்ட குடத்தில் தண்ணீர் ஏந்தி தனது ஆசிரமத்திற்கு கொண்டு வருவாள். அவளது கற்பின் சக்தியால் இது சாத்தியமாயிற்று.*

*ஒருமுறை வானத்தில் கந்தர்வன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். அவனது நிழல் ஆற்றில் தெரிந்தது. அதைப்பார்த்ததும் என்ன காரணத்தாலோ அவளது மனம் சலனப்பட்டது. ஆயினும் மனதில் விரசம் எதுவும் இல்லாமல். "இப்படியும் ஆணழகர்கள் உலகத்தில் இருக்கிறார்களா?" என்று மட்டுமே எண்ணினாள். அந்த மாத்திரத்திலேயே அவள் கையிலிருந்த குடம் உடைந்துவிட்டது.*

*ஜமதக்னி முனிவரின் ஞானத்திற்கு இது புரிந்துவிட்டது. இனி தன் மனைவியின் கற்பை பிறர் குறை கூறுவார்களே என்ற அச்சத்தில் மகன்களை அழைத்து தாயை வெட்டிவிடும்படி சொன்னார் மற்ற மகன்கள் மறுக்க, பரசுராமன் அந்தக் காரியத்தை செய்துமுடித்தார். அவரை ஜமதக்னி பாராட்டினார். என்ன வரம் வேண்டுமென கேட்டார். தன் தாயின் உயிரே திரும்பவும் வேண்டுமென பரசுராமர் கேட்டார்.*

*உடலில் உன் தாயின் தலையை பொருத்தி உயிர்பெறச் செய்," என ஜமதக்னி கூறிவிட்டார் பதட்டத்தில் வேறு ஒரு பெண்ணின் உடலில் தலையை பொருத்திவிட்டார் பரசுராமர். அப்பெண் உயிர் பெற்று எழுந்தாள்.*

*இதையெல்லாம் அந்த கந்தர்வன் கவனித்தான் தன்னைப் பார்த்தாள் என்ற ஒரே காரணத்துக்காக சற்றுகூட இரக்க மில்லாமல் தன் மனைவியை கொலைசெய்த ஜமதக்னி முனிவரை அவன் கொன்றுவிட்டான். உயிர் பெற்று எழுந்த ரேணுகா கணவரின் சிதையில் விழுந்தாள்.*

*இரண்டு புண்ணிய ஆத்மாக்கள் நியாயமற்ற முறையில் இறந்து எரிந்ததால் தேவலோகத்திற்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலைமை உருவானது. எனவே இந்திரன் வருணனை வரவழைத்து மழைபெய்து சிதை தீயை அணைக்கும்படி கூறினான் வருணனும் அவ்வாறே செய்ய, பாதி எரிந்த நிலையில் அப்பெண் எழுந்தாள் அவளது உடலில் ஆடைகள் இல்லை. அனைத்தும் எரிந்துபோயிருந்தன.*

*பதட்டத்துடன் அங்கு நின்ற வேப்பமர இலைகளை பறித்து, அவற்றால் உடலை மறைத்துக் கொண்டாள். உடலைத் தீப்புண் சுட்டதால் மஞ்சள் நீரை வாரி ஊற்றிக் கொண்டாள். உடலெங்கும் முத்து முத்தாக பொரிந்திருந்தது. முகம் மட்டும் பொலிவாக இருந்தது.*

*அந்நிலையில் தன் ஆற்றலால் உயிர் பெற்று எழுந்த ஜமதக்னி முனிவர் அவளை 'மாரி' என்ற பெயரில் மழைதரும் தெய்வமாக இவ்வுலகில் அருளும்படிசொன்னார். அதன்படியே இன்றும் வேப்பிலை கட்டுதல், மஞ்சள் நீராட்டு ஆகியவை அம்மன் கோயில்களில் நடக்கிறது. உடலில் முத்து முத்தாக அம்மை ஏற்பட்டால் வேப்பிலை பூசுகிறோம்.*
*🌹★★★அன்புடன்★★★🌹*
*சோழ.அர.வானவரம்பன்*.
*+918072055052*
*திருவிழா : ஆடிவெள்ளி, நவராத்திரி.*

*இருப்பிடம் : மேல்மருவத்தூரிலிருந்து 15 கி.மீ. வந்தவாசியிலிருந்து12 கி.மீ. தூரத்தில் உள்ள கீழ்கொடுங்காலூர் திருத்தலத்திற்கு பஸ் வசதி உள்ளது.*

*அருகிலுள்ள ரயில் நிலையம் : விழுப்புரம்.*

*அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை.*

*தங்கும் வசதி : விழுப்புரம்.*

11 months ago | [YT] | 6

Kotravai Selvi

கணவனுக்காக எரியும் தீயில் இறங்கிய பெண்... தெய்வமாய் மாறிய வரலாறு👇
youtube.com/shorts/JxI4hB3ElD...

1 year ago | [YT] | 3