இறைவன் உங்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
அனைத்தும் அவனே, அவனின்றி எதுவும் இல்லை.
இறைவன் அருளால், எல்லாம் நல்லதே நடக்கும்.
இனிய நறுமணம் உடைய சாம்பிராணி வாசனை இறைவனை உணர்வதற்கு உதவுவதுபோல், இந்த "சாம்பிராணி வாசனை " சேனல் நிச்சயம் நீங்கள் இறைவனை நினைத்து, இறைவன் அருள் பெற உதவும் என நம்புகிறேன்
... S.G.கோபிநாத் ...
Sambrani has a very happy peaceful fragrance. It calms the nerves and induces tranquility,making a person ready for prayers.
its also , i am hope sambrani vasanai channel help for your mind to thinking god
திருச்சிற்றம்பலம்🙏
சிவாய நம, திருவருளால் , தாங்கள் உதவி செய்ய விரும்பினால், கூகுள் பே ஐடிக்கு அனுப்பவும்.
Google pay upi id : gloriousgopinath@okicici
எல்லாம்வல்ல ஈசன், உங்களுக்கு அருள் செய்யட்டும். வாழ்க வளமுடன் நலமுடன். சிவாய நம, திருச்சிற்றம்பலம்🙏
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : gloriousgopinath@okicici
Thank you for your support! Thiruchitrambalam 🙏
... S.G.Gopinath ...
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் இன்று*
ஐப்பசி அன்னாபிஷேகம் செய்யும் முறை, சிறப்புகள், கிடைக்கும் பலன்கள் தகவல் வீடியோ
https://youtu.be/YWe3uDDB9iw?si=mK6qv...
🌹 ஐப்பசி அன்னாபிஷேகம்...
(🌝 ஐப்பசி பௌர்ணமி நாளில்)
சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று
கூறப்பட்டுள்ளது. அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அன்னம் தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.
அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே
காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.
அந்த இறைவனின் அருவுருவமான லிங்கமூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள்.
அன்னாபிஷேக பொருள் விளக்கம் :
அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.
பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான். அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.
சிவன் பிம்பரூபி. அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்னபூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.
தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவே தான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார்.
இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.
அன்னாபிஷேக தரிசன பலன்:
அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு
பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.
சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 16 பொருள்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம்.
சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.
ஆகமத்தில் அன்னாபிஷேகம்:
ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்க உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும்.
ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.
சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினல் குளிர்வது இயற்கைதானே.
அன்னத்தின் சிறப்பு:
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல்
அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை.
இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்படுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது. எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகின்றது.
முக்கிய குறிப்பு :
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
அன்னாபிஷேக மஹத்வம் :
இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன.
சிவனாருக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்துக்கு, நம்மால் முடிந்த அரிசியை வழங்குவோம். நாம் வழங்கும் அரிசியானது, சாதமாகி, சிவசொரூபனுக்கு உடையாக அலங்கரிக்கப்பட்டு, அந்த அன்னத்தைக் பக்தர்களுக்கு பிரசாதமாக, உணவாக வழங்கப்படுவது நமக்கு மிகுந்த புண்ணியத்தைத் தரவல்லது என்கிறார்கள் ஆச்சார்யார்கள்!
அன்னாபிஷேகத்துக்கு, இயன்றதை வழங்குங்கள். ஒருகைப்பிடி அரிசியேனும் வழங்குங்கள். அன்னாபிஷேக தரிசனத்தை கண்ணாலும் மனதாலும் கண்டு உணருங்கள். வாழ்வில் யோகமும் ஞானமும் பெறுவீர்கள். வீட்டில் தரித்திர நிலையே அண்டாது. எப்போதும் உணவுக்குப் பஞ்சமிருக்காது.
உலகின் அனைத்து உயிர்களுக்கும் புசிக்கும் புசிப்பினை குறையாமலே கொடுக்கும் அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து, அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து நன்மை அடைவோமாக.
ஓம் நமசிவாய... 🙏
https://youtu.be/YWe3uDDB9iw?si=mK6qv...
🙏✨🌕✨❤️✨🌕✨
2 weeks ago | [YT] | 69
View 1 reply
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
புரட்டாசி நான்காம் சனிக்கிழமை! செல்வம் பெருகப் பாராயணம் செய்ய வேண்டிய திருமால் 108 போற்றி 🙏✨
https://youtu.be/hndIh_75tBQ?si=8HU2Y...
வணக்கம் அன்பு வாசகர்களே! 🙏
10.10.2026 சனிக்கிழமை, புரட்டாசி மாதத்தின் நான்காம் சனிக்கிழமை. திருமாலின் திருவருளையும், மகாலட்சுமி தாயாரின் பேரருளையும் வேண்டி வழிபடுவதற்கு உகந்த இந்த நன்னாளில், செல்வச்செழிப்பை அருளும் திருமால் 108 போற்றிகளைப் பாராயணம் செய்து இறைவனின் அருளைப் பெறுவோம்.
🌺 திருமால் 108 போற்றிகளைப் பாராயணம் செய்வதன் சிறப்பு என்ன?
திருமால், மகாவிஷ்ணு, நாராயணன், கோவிந்தன் எனப் பல திருநாமங்களால் போற்றப்படும் பரந்தாமனின் திருநாமங்களை உச்சரிப்பது மனதிற்கு அமைதியையும், பக்தியையும், நம்பிக்கையையும் அளிக்கும் ஆன்மீக வழிபாடாகும்.
சனிக்கிழமைகளிலும், ஏகாதசி நன்னாளிலும் பெருமாள் அல்லது கிருஷ்ணர் கோயில்களுக்குச் செல்லும்போது இந்தப் போற்றிகளைப் பாராயணம் செய்யலாம். வீட்டில் திருவிளக்கேற்றி, மனதை ஒருமுகப்படுத்தி, திருமாலின் திருநாமங்களைப் பக்தியுடன் சொல்லியும் வழிபடலாம்.
மகாலட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கும் திருமாலை மனமார வழிபட்டு, குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை, நலன் மற்றும் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்க வேண்டிப் பிரார்த்தனை செய்யலாம்.
🙏 செல்வச்செழிப்பை அருளும் திருமால் 108 போற்றி
ஓம் நமோ நாராயணா!
ஓம் நமோ நாராயணா!
ஓம் நமோ நாராயணா!
1. ஓம் ஹரி ஹரி போற்றி!
2. ஓம் ஸ்ரீஹரி போற்றி!
3. ஓம் நரஹரி போற்றி!
4. ஓம் முரஹரி போற்றி!
5. ஓம் கிருஷ்ண ஹரி போற்றி!
6. ஓம் அம்புஜாக்ஷா போற்றி!
7. ஓம் அச்சுதா போற்றி!
8. ஓம் உச்சிதா போற்றி!
9. ஓம் பஞ்சாயுதா போற்றி!
10. ஓம் பாண்டவர் தூதா போற்றி!
11. ஓம் லட்சுமி சமேதா போற்றி!
12. ஓம் லீலா விநோதா போற்றி!
13. ஓம் கமல பாதா போற்றி!
14. ஓம் ஆதிமத்தியாந்த ரகிதா போற்றி!
15. ஓம் அநாத ரக்ஷகா போற்றி!
16. ஓம் அகிலாண்டகோடி போற்றி!
17. ஓம் பரமானந்தா போற்றி!
18. ஓம் முகுந்தா போற்றி!
19. ஓம் வைகுந்தா போற்றி!
20. ஓம் கோவிந்தா போற்றி!
21. ஓம் பச்சை வண்ணா போற்றி!
22. ஓம் கார்வண்ணா போற்றி!
23. ஓம் பன்னகசயனா போற்றி!
24. ஓம் கமலக்கண்ணா போற்றி!
25. ஓம் ஜனார்த்தனா போற்றி!
26. ஓம் கருடவாகனா போற்றி!
27. ஓம் ராட்சச மர்த்தனா போற்றி!
28. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி!
29. ஓம் சேஷசயனா போற்றி!
30. ஓம் நாராயணா போற்றி!
31. ஓம் பிரம்ம பாராயணா போற்றி!
32. ஓம் வாமனா போற்றி!
33. ஓம் நந்த நந்தனா போற்றி!
34. ஓம் மதுசூதனா போற்றி!
35. ஓம் பரிபூரணா போற்றி!
36. ஓம் சர்வகாரணா போற்றி!
37. ஓம் வெங்கட ரமணா போற்றி!
38. ஓம் சங்கட ஹரனா போற்றி!
39. ஓம் ஸ்ரீதரா போற்றி!
40. ஓம் துளசிதரா போற்றி!
41. ஓம் தாமோதரா போற்றி!
42. ஓம் பீதாம்பரா போற்றி!
43. ஓம் பலபத்ரா போற்றி!
44. ஓம் பரமதயாபரா போற்றி!
45. ஓம் சீதா மனோகரா போற்றி!
46. ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி!
47. ஓம் பரமேஸ்வரா போற்றி!
48. ஓம் சங்கு சக்கரா போற்றி!
49. ஓம் சர்வேஸ்வரா போற்றி!
50. ஓம் கருணாகரா போற்றி!
51. ஓம் ராதா மனோகரா போற்றி!
52. ஓம் ஸ்ரீரங்கா போற்றி!
53. ஓம் ஹரிரங்கா போற்றி!
54. ஓம் பாண்டுரங்கா போற்றி!
55. ஓம் லோகநாயகா போற்றி!
56. ஓம் பத்மநாபா போற்றி!
57. ஓம் திவ்ய சொரூபா போற்றி!
58. ஓம் புண்ணிய புருஷா போற்றி!
59. ஓம் புருஷோத்தமா போற்றி!
60. ஓம் ஸ்ரீ ராமா போற்றி!
61. ஓம் ஹரிராமா போற்றி!
62. ஓம் பலராமா போற்றி!
63. ஓம் பரந்தாமா போற்றி!
64. ஓம் நரசிம்மா போற்றி!
65. ஓம் திரிவிக்ரமா போற்றி!
66. ஓம் பரசுராமா போற்றி!
67. ஓம் சகஸ்ரநாமா போற்றி!
68. ஓம் பக்தவத்சலா போற்றி!
69. ஓம் பரமதயாளா போற்றி!
70. ஓம் தேவானுகூலா போற்றி!
71. ஓம் ஆதிமூலா போற்றி!
72. ஓம் ஸ்ரீலோலா போற்றி!
73. ஓம் வேணுகோபாலா போற்றி!
74. ஓம் மாதவா போற்றி!
75. ஓம் யாதவா போற்றி!
76. ஓம் ராகவா போற்றி!
77. ஓம் கேசவா போற்றி!
78. ஓம் வாசுதேவா போற்றி!
79. ஓம் தேவதேவா போற்றி!
80. ஓம் ஆதிதேவா போற்றி!
81. ஓம் ஆபத்பாந்தவா போற்றி!
82. ஓம் மகானுபாவா போற்றி!
83. ஓம் வசுதேவ தனயா போற்றி!
84. ஓம் தசரத தனயா போற்றி!
85. ஓம் மாயாவிலாசா போற்றி!
86. ஓம் வைகுண்டவாசா போற்றி!
87. ஓம் சுயம்பிரகாசா போற்றி!
88. ஓம் வெங்கடேசா போற்றி!
89. ஓம் ஹ்ருஷிகேசா போற்றி!
90. ஓம் சித்திவிலாசா போற்றி!
91. ஓம் கஜபதி போற்றி!
92. ஓம் ரகுபதி போற்றி!
93. ஓம் சீதாபதி போற்றி!
94. ஓம் வெங்கடாசலபதி போற்றி!
95. ஓம் ஆயாமாயா போற்றி!
96. ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி!
97. ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி!
98. ஓம் உலகமுண்டவாயா போற்றி!
99. ஓம் நானா உபாயா போற்றி!
100. ஓம் பக்தர்கள் சகாயா போற்றி!
101. ஓம் சதுர்புஜா போற்றி!
102. ஓம் கருடத்துவஜா போற்றி!
103. ஓம் கோதண்டஹஸ்தா போற்றி!
104. ஓம் புண்டரீகவரதா போற்றி!
105. ஓம் விஷ்ணு போற்றி!
106. ஓம் பகவானே போற்றி!
107. ஓம் பரமதயாளா போற்றி!
108. ஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!!
ஓம் நமோ நாராயணா!
ஓம் நமோ நாராயணா!
ஓம் நமோ நாராயணா!
🌼 வழிபடும் முறை
🪔 அதிகாலையில் நீராடி, பூஜையறையைத் தூய்மைப்படுத்தி, திருவிளக்கேற்றுங்கள்.
🌸 திருமாலுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் மலர்கள் சமர்ப்பித்து, இயன்றவரை துளசி இலைகளால் அர்ச்சனை செய்யுங்கள்.
🙏 மனதை ஒருமுகப்படுத்தி, 108 போற்றிகளையும் பக்தியுடன் பாராயணம் செய்யுங்கள்.
💛 குடும்ப நலன், மன அமைதி, வாழ்வில் முன்னேற்றம் ஆகியவற்றை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
பக்தியுடன் இறைவனை நினைத்து வழிபடுவது நம் மனதிற்கு நம்பிக்கையையும் அமைதியையும் அளிக்கும். செல்வம் என்பது பணத்தை மட்டும் குறிப்பதல்ல; உடல்நலம், குடும்ப ஒற்றுமை, மனநிறைவு, நல்ல எண்ணங்கள் ஆகியவையும் வாழ்வின் உண்மையான செல்வங்களே!
இந்தப் புரட்டாசி சனிக்கிழமையில் திருமாலின் திருநாமங்களைப் பாராயணம் செய்து, அனைவரும் நலமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்.
🙏🙏🙏🙏
https://youtu.be/hndIh_75tBQ?si=8HU2Y...
4 weeks ago | [YT] | 11
View 0 replies
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
திருநாவுக்கரசர் தேவாரம் பொருள் விளக்கம் 🙏
3 months ago | [YT] | 0
View 0 replies
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
https://youtu.be/fYfRScALjp4?si=nY_rU...
4 months ago | [YT] | 2
View 0 replies
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
"ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக"
https://youtu.be/l7zBTVQl4Lo?si=r0DMW...
7 months ago | [YT] | 3
View 0 replies
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
https://youtu.be/vWtU4UUAF7U?si=z3dnq...
ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவில் மகா ரதம் திருவிழா நடைபெறும் நாளில் பக்தர்கள் கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
கரும்புத் தொட்டிலுக்கு தேவையான கரும்பு கட்டுகள் கோவிலுக்கு வெளியே விற்கிறார்கள்.
இந்த வருடம் மகா ரதம் 30.11.2025.
காலையிலிருந்து மாலை வரை திருவண்ணாமலை கோவில் மாட வீதிகளில் ஐந்து ரதங்கள் தனித்தனியாக வலம் வரும்.
சிவாய நம
https://youtu.be/vWtU4UUAF7U?si=z3dnq...
1 year ago | [YT] | 7
View 0 replies
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
youtube.com/shorts/6PdVm2AA4S...
1 year ago | [YT] | 3
View 0 replies
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
https://youtu.be/UewLWCoDMH8?si=QxCbH...
கோவில் இடிப்பதற்கு முன்பு இருந்த, கோவிலின் அழகான பழைய தோற்றம் வீடியோ பதிவு.
https://youtu.be/UewLWCoDMH8?si=QxCbH...
1 year ago (edited) | [YT] | 7
View 1 reply
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
https://youtu.be/tZkSNFf1LS0?si=06ksh...
1 year ago | [YT] | 14
View 0 replies
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
திருநீறு அணிந்தவரை சிவனாகவே நினைத்து வணங்குங்கள். திருச்சிற்றம்பலம்.
https://youtu.be/5D1W2hOod6E?si=RFYFJ...
மெய்ப்பொருள் நாயனார் வரலாறு
1 year ago | [YT] | 3
View 0 replies
Load more