ENDRENDRUM SIVAJI

நடிகர் திலகத்தின் திரைப்படங்களை திலகத்தின் புகழை இளம் தலைமுறையினரும் அறிய வேண்டும் என்பது நோக்கம் !
2020 ஆம் ஆண்டு சுதந்திர திருநாள் அன்று இனிதே ஆரம்பித்து பல நடிகர் திலகத்தின் படங்கள் , பாடல்கள் மற்றும் காட்சிகள் பற்றிய ஆய்வு ,அலசல் ஆகியவற்றை பதிவு செய்து இளம் தலைமுறையினரும் நடிகர் திலகத்தின் புகழை அறிய வேண்டும் என்ற நோக்கில் இப்பணியை தொடர்ந்து இருக்கிறோம் .
நடிகர் திலகம் எனும் மையப்புள்ளியில் இணைந்திருக்கும் இந்த வண்ணக்கோலங்கள் இனிவரும் வரும் காலங்களில் மேன்மை பெறும் என்ற நம்பிக்கையோடு உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் எதிர் நோக்கி உள்ளோம் !
we are continuing this work with the aim of making the younger generation aware of the fame of Legendary actor Nadigar Thilagam” Sivaji Ganesan


Follow on Facebook : www.facebook.com/profile.php?id=100063455119586
Follow us on Instagram: www.instagram.com/endendrum_sivaji/



ENDRENDRUM SIVAJI

1960களில் மிகச் சிறந்த படைப்புகளை தந்த இயக்குநர் பீம்சிங் அவர்களின் பிறந்த தினம் இன்று.

இந்நேரத்தில், ‘பா’ வரிசைப் படங்களால் புகழ்பெற்ற பீம்சிங், 1961ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான மூன்று படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. அவை பாசமலர், பாவ மன்னிப்பு, பாலும் பழமும். இந்த மூன்று படங்களையும் இயக்கியிருந்தவர் நடிகர் திலகத்தால் #பீம்பாய் என செல்லமாக அழைக்கப்பட்ட பீம்சிங்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன், பீம்சிங் இணைந்தால் அப்படங்களின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தளிப்பவையாக அமையும். அவையும் அப்படங்களின் வெற்றிக்கு கட்டியம் கூறும். பாகப்பிரிவினை, களத்தூர் கண்ணம்மா, பாவ மன்னிப்பு, பாசமலர் போன்ற திரைப்படங்கள் தேசிய அளவில் அவருக்கு பாராட்டுகளையும் பல்வேறு விருதுகளையும் பெற்றுத் தந்த படங்களில் முக்கியமானவை.

அவர் படைப்புகள் வழியே அவர் சொல்லிச் சென்ற படங்களையும் நடிகர் திலகத்தின் காவிய பங்களிப்பை நினைவுகூர்வோமாக!
#ABhimsingh #பீம்சிங் #SivajiGanesan
Endrendrum Sivaji

2 weeks ago | [YT] | 239

ENDRENDRUM SIVAJI

#trpapa #musicdirector #remebering
திருத்துறைப்பூண்டி ராதாகிருஷ்ணன் சிவசங்கரன் என்கிற டி ஆர் பாப்பா பழம்பெரும் இசையமைப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் சிங்கள படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

1952ல் ஆத்ம சந்தி " என்ற மலையாள படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகமானார். அற்புதமான பல பாடல்கள் தந்த இவர் இயக்குனர் டி ஆர் ராமண்ணா அவர்களின் வகுப்பு தோழர்.

நடிகர் திலகத்தின் அன்பு, ராஜா ராணி, ரங்கோன் ராதா, குறவஞ்சி ஆகிய படங்களுக்கு இசையமைத்த தமிழ் இசைச் சங்கம் மூலம்" இசைப் பேரறிஞர் என்ற பட்டமும் பெற்ற இசையமைப்பாளர் டி ஆர் பாப்பா நினைவு தினம் இன்று 🎉 Endrendrum Sivaji

2 weeks ago | [YT] | 128

ENDRENDRUM SIVAJI

பலே .. புருஷனை போருக்கு அனுப்பும் உன் பாணி பரணி பாடக்கூடியது .✋🥰 #veerapandiyakattabomman #SivajiGanesan #SVaralakshmi Endrendrum Siva

1 month ago | [YT] | 244

ENDRENDRUM SIVAJI

மகான் காந்தி மகான்
வாழ்ந்த தியாகியாம் நீ
பூலோகம் மீதிலே…..
கை ராட்டையே ஆயுதம்
கதர் ஆடையே சோபிதம்
ஜெய வந்தே மாதரம் ..
ஜெய பாரத மணிக்கொடி
சீரோங்கி வாழ்கவே
ஜெய வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம் !

1 month ago | [YT] | 96

ENDRENDRUM SIVAJI

கர்ம வீரர் #காமராஜர் நினைவு தினம் 🎉
பெருந்தலைவர் காமராஜர், அரசியல் களத்தில் எளிமைக்கும் மக்கள் சேவைக்கும் அடையாளமாகத் திகழ்ந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கலை உலகில் உழைப்புக்கும் நடிப்புத் திறமைக்கும் அடையாளமாக விளங்கினார்.

இருவருக்கும் இடையே நிலவிய தொடர்பு அரசியல் சார்ந்ததாக மட்டுமல்லாமல், பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, அன்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருந்தது. குறிப்பாக, காமராஜரின் தலைமைப் பண்புகளால் ஈர்க்கப்பட்ட சிவாஜி கணேசனின் அரசியல் பயணம், இவர்களது உறவில் முக்கிய இடம் வகிக்கிறது.

காமராஜரின் எளிமையான வாழ்க்கை, அதிகாரத்தின் மீது பற்றற்ற அணுகுமுறை, மக்கள் நலனில் கொண்டிருந்த அக்கறை ஆகியவை சிவாஜி கணேசனை ஈர்த்த அம்சங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. காமராஜர் மீது கொண்டிருந்த தனிப்பட்ட மதிப்பைச் சிவாஜி பல ஆண்டுகளாக வெளிப்படுத்தி வந்தார்.

1 month ago | [YT] | 287

ENDRENDRUM SIVAJI

தமிழகத்தின் அரசியல் வரலாற்றிலும், தமிழ்த் திரையுலகின் வரலாற்றிலும் தனித்துவமான இடத்தைப் பெற்ற இரு பெருமக்கள் பெருந்தலைவர் காமராஜரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஆவர். ஒருவர் எளிமையையும் மக்கள் நல அரசியலையும் முன்னிறுத்திய தலைவர்; மற்றொருவர் தனது நடிப்பாற்றலால் தமிழ்த் திரையுலகில் தனி முத்திரை பதித்த கலைஞர்.
இருவருக்கும் இடையே நிலவிய தொடர்பு அரசியல் சார்ந்ததாக மட்டுமல்லாமல், பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, அன்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருந்தது. குறிப்பாக, காமராஜரின் தலைமைப் பண்புகளால் ஈர்க்கப்பட்ட சிவாஜி கணேசனின் அரசியல் பயணம், இவர்களது உறவில் முக்கிய இடம் வகிக்கிறது.
இருவரது உறவில் குறிப்பிடத்தக்க ஒரு வரலாற்று நிகழ்வு 1975ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்றது.
அன்று சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு, உடல்நலம் குன்றியிருந்த காமராஜர் அவரைப் பாராட்டுவதற்காகச் சென்றதாக வரலாற்று ஆய்வுக் கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறுநாளான அக்டோபர் 2ஆம் தேதி காமராஜர் காலமானார்.
சிவாஜியின் பிறந்தநாளன்று காமராஜர் அவரைச் சந்தித்த நிகழ்வு, இருவருக்குமிடையிலான நெருக்கத்தை நினைவுகூரும் முக்கியமான சம்பவமாகும். Endrendrum Sivaji

1 month ago | [YT] | 450

ENDRENDRUM SIVAJI

சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் இன்றும் பல தலைமுறை ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. அவரது வசன உச்சரிப்பு, மேடைப் பயிற்சி, மாறும் உடல்மொழி ஆகியவை தமிழ் நடிப்புக் கலையின் வரலாற்றில் தனி இடத்தைப் பெற்றுள்ளன.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் கலைச்சாதனைகள் என்றும் அழியாதவை. அவரது நடிப்பும் கலைப்பணியும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றென்றும் போற்றப்படும்!

1 month ago | [YT] | 198

ENDRENDRUM SIVAJI

#Nagesh #comedy #SivajiGanesan #birthday
நாகேஷ் நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர். குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் திருவிளையாடல் போன்ற கிளாசிக் படங்களில் சிவபெருமானுக்கும் தருமிக்கும் இடையிலான பிரபலமான நகைச்சுவை வசனங்கள் இன்றும் பேசப்படுகின்றன. நடிகர் திலகமும் நாகேஷும் நடித்து இந்த படத்தை ஒரு உன்னதமான படமாக்கியது.

நாகேஷ் ஒரு தலைசிறந்த நகைச்சுவை நடிகராக திகழ்ந்தார் ."இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ்" என்று அழைக்கப்பட்டார்,
இருவரும் பல தமிழ் படங்களில் ஒன்றாக நடித்து வெற்றிகரமான கூட்டணியாக நடித்து வந்தனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களில் நாகேஷின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது, திருவிளையாடல் படத்தில் இருந்து நாகேஷின் எந்த காட்சிகளையும் நீக்க வேண்டாம் என்று கணேசனே கேட்டுக் கொண்டதாக நாம் அறிவது நாகேஷின் நகைச்சுவை மதிப்பை நடிகர் திலகம் அங்கீகரித்ததை அறியலாம்.

"இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ்" என்ற பாராட்டுக்களை பெற்ற நாகேஷ் (1937–2015) பிறந்த தினம் இன்று 🎉 Endrendrum Sivaji

1 month ago | [YT] | 332

ENDRENDRUM SIVAJI

#விநாயகனே_வினை_தீர்ப்பவனே!
கணேசனின் பாதம் பணிந்து, அவர் அருளால் அனைத்துத் தடைகளையும் வென்று துன்பங்களை நீக்கி, இன்பங்களைப் பெருக்கி, நன்மையை வழங்கிடும் வேழமுகத்தானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். 🙏 நமது 'என்றென்றும் சிவாஜி' YouTube Channel நண்பர்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

1 month ago | [YT] | 159

ENDRENDRUM SIVAJI

Remembering Super Star Villain P.S.Veerappa
சிவாஜி கணேசன், எம் ஜி ஆர் தொடங்கி கமல் ரஜினி விஜய்காந்த் என நான்கு தலைமுறை ஹீரோக்களுடன் வில்லனாக நடித்தவர் பி. எஸ். வீரப்பா.

நடிகர் திலகம் பி எஸ் வீரப்பா வின் நடிப்பு மற்றும் அவரது பிரபல்யமான வெடிச் சிரிப்பிற்கு ரசிகர். இந்த அபிமானத்தை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக பத்திரிகைகளில் குறிப்பிடுவார்.

பி எஸ் வீரப்பா திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டார். 20 படங்களுக்கும் மேல் படங்களை தயாரித்து இருக்கிறார். நடிகர் திலகத்தை வைத்து ஆலயமணி, ஆண்டவன் கட்டளை மற்றும் இரு துருவம் படங்களை தயாரித்தார்.

1 month ago | [YT] | 379